குட்டி மீனாக்ஷி

ஊரிலேயே சற்று வசதியான குடும்பம் என்று சொல்லத் தக்கது மணி ஐயரின் வீடு. தன மனைவி கல்யாணியுடன் அந்த பெரிய வீடடில் தனியாக வாசம் செய்து வந்த அந்த தம்பதியருக்கு குழந்தைகள் இல்லாதது ஒரு பெரிய  குறைதான்.  உள்ளூர் மணியமாக இருந்த மணி ஐயருக்கு நில புலன்கள் ஏராளம்.அவரது தம்பிக்கு நான்கு ஆண் குழந்தைகள் இருந்ததால் ஒரு பிள்ளையை தான் தத்து எடுத்து வளர்க்கும் எண்ணம் அவர் மனதில் தோன்றியதில் ஆச்சரியம இல்லை. தன மனைவி கல்யாணியிடம் அது பற்றி பேசும்போது அதில் சுவாரசியம் காட்டாதது கண்டு விட்டு விட்டார்.

பெரிய மணியம் என்பதால் அவர் வீடடில் எப்போதும் பணி ஆட்கள் புடை சூழ கல கல வென்று இருக்கும். ஒரு பொங்கல் அன்று அவர் நிலத்தை பார்த்துக்கொள்ளும் முனியன் அதில் விளைந்த அரிசி, வாழை, கரும்பு மற்றும் இதர சாமான்களை வண்டி நிறைய வீடடில் கொண்டு வந்து கொடுத்தான். அவன் கூடவே சுட்டியாக துரு துரு என்று ஒரு சின்னம் சிறிய பெண் வருவதை கண்ட கல்யாணிக்கு அந்த குழந்தை யிடம் பேச வேண்டும் போல் தோன்றியது. ஏய் பாப்பா, இங்கே வாயேன் என்று அழைத்தாள். என்ன மாமி கூப்டீங்களா என்றவாறே ஓடி வந்தவளை தன மடியில் அமர்த்திக்கொண்டாள். உன் பெயர் என்னம்மா என்று கேட்டதும் என் பெயர் மீனாக்ஷி மாமி என்றாள் அந்த சிறுமி. ஆகா! பெரிய அழகிய விழியுடன் இருந்த அச் சிறுமிக்கு எத்தனை பொருத்தமான ஒரு பெயர் என்று வியந்தாள் கல்யாணி.பள்ளிக்கூடம் போவதாகவும், ஒண்ணாம் க்ளாஸ் என்றும் பட பட வென்று பேசிய அவளையே பார்த்து கொண்டிருந்த கல்யாணியை, என்ன குட்டி ஒன்னையும் மயக்கிட்டாளா என்ற மணி ஐயரின் குரல் சுய நினைவுக்கு வர வைத்தது. ஆமான்னா! எத்தன அழகா இருக்கா, எப்படி பேசறா பாருங்கோ.ரொம்ப புத்திசாலியா வருவா போல இருக்கு இல்லே என்றாள். நம்ம முனிய்னோட ஒரே பொண்ணு, தாயில்லாத கொழந்தை, அதான் அவனோடயே சுத்திண்டு இருக்கா என்றார் மணி ஐயர். கண்ணில் நீர் துளிர் விட நின்ற கல்யாணியை பார்த்து, என்ன கொழந்தைய நீ தத்து எடுத்துக் கலாம்னு நினைக்கிறாயா என்று கேட்டார். என்ன பேச்சு பேசறேள், தாயையும் இழந்துட்டு அப்பாவோட சுத்தி வளைய வர கொழந்தைய அந்த தந்தை யையும் விட்டு பிரிக்க சொள்ளறேளா மகா பாவம்ணா. நான் நினைச்சது வேற என்றாள். சரி, என்ன நினைச்சே சொல்லேன் என்றார் மணி ஐயர். இத்தனை சாமர்த்தியமான குழந்தையை நல்லா பராமரிக்கவோ அல்லது நன்றாக படிக்க வைக்கவோ முனியனுக்கு வசதி இல்லை.நமக்கோ எல்லா வசதிகள் இருந்தும் குழந்தை பாக்கியம் இல்லை.  நாம்  ஏன இந்த குழந்தையின் படிப்புக்காகவும், பராமரிப்புக்காகவும் ஆகும் செலவை  ஏத்துக்க கூடாது? அப்பப்ப நம்ம வீட்டுக்கு வந்து இருந்துட்டு போகட்டுமே.என்ன நான் சொல்லறது என்றாள் கல்யாணி. எத்தனை பெரிய மனசுடி ஒனக்கு, சுய நலமில்லாமே ஒரு காரியம். இப்போதே நான் ஏற்பாடு செய்கிறேன் என்று புறப்பட்டார் மணி ஐயர். …. தன்னலமற்ற பாசம் தெய்வீகம்

Write a comment ...